முதல் முறையாக ஸ்பெயினில் கண்டுபிடிக்கபட்ட வெள்ளை பூனைப் புலி! வைரல் வீடியோ...!



white-iberian-lynx-discovered-in-spain

உலக வனவிலங்குகள் குறித்து பல அதிசயங்கள் வெளிப்படும் ஸ்பெயினில், தற்போது ஒரு புதிய அதிசயம் வெளிப்பட்டுள்ளது. அங்கே உலகின் முதல் வெள்ளை பூனைப் புலி கண்டுபிடிக்கப்பட்ட செய்தி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளை பூனைப் புலி

ஸ்பெயினில் உள்ள ஒரு புகைப்படக் கலைஞர், மிக அரியவகை இனமான ஐபீரியன் லின்க்ஸ் (Iberian Lynx) எனப்படும் பூனைப் புலியின் வெள்ளை நிற வடிவத்தை கண்டுபிடித்துள்ளார். இதுவே உலகின் முதல் வெள்ளை நிற Iberian lynx என வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதையும் படிங்க: இது தான் பறவையின் காதல்! தன் துணையை உயிர்ப்பிக்க முயற்சிக்கும் அன்னப்பறவை! என்னா பாடு படுது பாருங்க! உணர்ச்சி பூர்வமான காட்சி...

‘லியூசிஸம்’ என்ற உயிரியல் காரணம்

இந்த பூனைப் புலி வெள்ளையாகத் தோன்ற காரணம் ‘லியூசிஸம்’ (Leucism) என்ற நிலை என நிபுணர்கள் கூறுகின்றனர். இது விலங்குகளின் ரோமங்களில் நிறமிகள் (Pigments) குறைவதாலே ஏற்படுகிறது. இதன் விளைவாக விலங்குகள் வெள்ளை அல்லது வெளிர் நிறத்தில் தோன்றும்.

வைரலாகும் காணொளி

புகைப்படக் கலைஞர் பதிவு செய்த இந்த வெள்ளை பூனைப் புலியின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. உலக வனவிலங்கு ஆர்வலர்களும் இயற்கை பாதுகாப்பு அமைப்புகளும் இதை ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாக வரவேற்றுள்ளனர்.

இயற்கையின் அதிசயங்கள் முடிவில்லாதவை என்பதற்கான இன்னொரு சான்றாக இந்த வெள்ளை பூனைப் புலி வெளிப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு ஸ்பெயின் வனவிலங்குகளுக்கு புதிய அடையாளமாக மாறியுள்ளது.

 

இதையும் படிங்க: தங்க கோபுரத்தில் வெள்ளை ஆந்தை! வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் நடந்த அதிசயம்! வைரல் வீடியோ..