அடக்கொடுமையே... விட்டமின் மாத்திரை என நினைத்து ஏர் பாட்ஸை விழுங்கிய பெண்... நடந்தது என்ன.?

அடக்கொடுமையே... விட்டமின் மாத்திரை என நினைத்து ஏர் பாட்ஸை விழுங்கிய பெண்... நடந்தது என்ன.?



what-happened-to-the-woman-who-swallowed-air-pods-think

அமெரிக்காவைச் சார்ந்த பெண் ஒருவர் விட்டமின் மாத்திரை என நினைத்து ஆப்பிள் ஏர் பாட்ஸை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவைச் சார்ந்த 52 வயதான டான்னா பார்கர் என்ற பெண் தனது தோழியை நீண்ட காலத்திற்குப் பிறகு சந்திக்க சென்று இருக்கிறார். அப்போது இருவரும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து இருக்கின்றனர். இந்நிலையில் பார்க்கர் தனது விட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள நினைத்தார்.

America

அப்போது தவறுதலாக விட்டமின் மாத்திரைகள் என நினைத்து ஆப்பிள் பாட்ஸை விழுங்கிவிட்டார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சையின் மூலம் ஏர் பாட்ஸ் அகற்றப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக  தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

America

மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. இதுவரை 27 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.