வலிப்பு நோய், வாந்தியால் 15 ஆண்டுகளாக அவதிப்பட்டுவந்த நபர்! ஸ்கேன் செய்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி!! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா

வலிப்பு நோய், வாந்தியால் 15 ஆண்டுகளாக அவதிப்பட்டுவந்த நபர்! ஸ்கேன் செய்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி!!

சீனாவை சேர்ந்தவர் வாங்க். 36 வயது நிறைந்த இவர் அடிக்கடி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு அடிக்கடி வாந்தி ஏற்பட்டு மிகவும் சோர்வுடன் காணப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி அவருக்கு இடது கையும், காலும் மரத்துப் போன நிலையில் எந்த வேலையும் செய்ய முடியாமல் அவர் பெருமளவில் தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவரது கஷ்டத்தை கண்ட குடும்பத்தார்கள் அவரை பல மருத்துவமனைக்கும் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது மூளைக்குள் நாடாப்புழு ஒன்று உயிருடன் நகர்வது போன்று தெரிந்துள்ளது. 

மேலும் அந்த புழு வாங்கின் மூளையை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு வந்துள்ளது. இதனாலேயே அவருக்கு வலிப்பு நோய், மயக்கம் போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள்  உயிருக்கு மிகவும் அபாயகரமான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு 5 இன்ச் நீளமுள்ள நாடாபுழுவை வெளியே எடுத்துள்ளனர். 

மேலும் அந்த புழு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக அவரது மூளைக்குள் வாழ்ந்து வந்துள்ளது. பின்னர் அந்தபுழு  நீக்கப்பட்ட பின் அவரது உடல்நலம் தேறி வருகிறது. மேலும் சரியாக வேக வைக்காத இறைச்சியை உண்ணுவதன் மூலம் இந்த பிரச்சினை ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo