அதிசயமா? ஆச்சர்யமா? கோயிலில் படமெடுத்து நின்ற நள்ளாத்துப் பாம்பு...! தலையில் ஒளிரும் மணியால் பரவசத்தில் பக்தர்கள்! வைரலாகும் வீடியோ ..!!!



viral-nagamani-snake-video-fact-check

நள்ளாத்துப் பாம்பின் தலையில் நாகமணி இருப்பதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோயில் வளாகத்தில் எடுக்கப்பட்டதாகப் பரவும் இந்தக் காட்சி, உண்மையா அல்லது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வியை இணையத்தில் எழுப்பியுள்ளது.

தலையில் ஒளிரும் மணி போன்ற அமைப்பு

சமீபத்தில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், நள்ளாத்துப் பாம்பின் தலையில் மணி போன்ற ஒளிரும் அமைப்பு ஒன்று தென்படுகிறது. இதைப் பார்த்த பலர், முன்னோர்கள் கூறிய நாகமணி பற்றிய கதைகளை நினைவுகூர்ந்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இது கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பாம்பு என கூறப்படுவதால், வீடியோ மேலும் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: விமானத்தோட இறக்கையில் ஊர்ந்த பாம்பு! அதிர்ச்சி வீடியோவை கண்ட... உண்மை சோதனையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!!!

பழம்பெரும் நம்பிக்கையுடன் இணையும் விவாதம்

நாட்டுப்புறக் கதைகளில், புதையல்களுக்கும் ரகசிய பொக்கிஷங்களுக்கும் பாம்புகள் காவல் காக்கும் என்றும், சில நாகங்களிடம் நாகமணி இருக்கும் என்றும் நம்பிக்கை பரவி வருகிறது. தகவலின்படி, அந்த நம்பிக்கையுடன் இந்த வீடியோவையும் பலர் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மையா அல்லது AI உருவாக்கமா?

இதையடுத்து, தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியில் இது உண்மையான காட்சியா அல்லது டிஜிட்டல் கிராபிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுவரை இந்தக் காட்சியின் நம்பகத்தன்மை குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த மர்மமான வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளைக் குவித்து இணையத்தில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது.

 

இதையும் படிங்க: குப்பையில் தூக்கி வீசப்பட்ட அந்த ஒரு சீட்..! 2 நாட்கள் நடந்த தீவிர தேடல்.... கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி! அமௌன்ட்டை பார்த்தா ஆடிபோயிருவீங்க...!!!