வானில் நிகழ்ந்த அற்புத நிகழ்வு; செயற்கைக்கோளில் பதிவான உன்னதமான வீடியோ!

வானில் நிகழ்ந்த அற்புத நிகழ்வு; செயற்கைக்கோளில் பதிவான உன்னதமான வீடியோ!



Video of solar eclipse

கடந்த ஜூலை 2ம் தேதி நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தின் போது பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சூறாவளி செயற்கைக்கோளில் பதிவாகியுள்ளது.

சூரிய கிரகணம் என்பது நிலவானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் ஒரே நேர்கோட்டில் வரும் பொழுது நடைபெறும் நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வின் போது மட்டுமே நிலவின் நிழல் பூமியின் மேல் விழும்.

Solar eclipse

இந்த ஆண்டு சூரிய கிரகணம் கடந்த ஜூலை 2ஆம் தேதி நிகழ்ந்தது. அப்பொழுது தென் அமெரிக்க நாடுகளான சிலி மற்றும் அர்ஜெண்டினாவின் மீது நிலவின் நிழல் சிறிது நேரம் சூழ்ந்திருந்தது. அதே சமயத்தில் பசிபிக் பெருங்கடலில் பலத்த சூறாவளியும் ஏற்பட்டுள்ளது. இந்த சூறாவளிக்கு பார்பரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

நிலவின் நிழல் பூமியின் மேல் காட்சியும், கடலில் சூறாவளி உருவாகும் காட்சியும் ஒரே நேரத்தில் ஒரு செயற்கைகோளில் பதிவாகியுள்ளது. இதைப் போன்ற காட்சி கிடைப்பது மிகவும் அரிதான நிகழ்வு என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். கண்சாஸ் நகரத்தின் வானிலை ஆய்வு மையம் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.