தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
#BigNews: உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவோம் - அமெரிக்கா பரபரப்பு அறிவிப்பு..!
அமெரிக்காவின் ஆயுதங்களை ரஷியாவுக்கு எதிராக போரிட உக்ரைனுக்கு வழங்குவோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்து இருக்கிறார்.
உக்ரைன் - ரஷியா போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு தேவையான இராணுவ தளவாடங்கள், பொருளாதார உதவி போன்றவற்றை ஏகாதிபத்திய மேற்கு நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்றவை செய்து வருகின்றன. போரின் தொடக்கத்தின் போதே ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைனுக்கு ஆதரவாக போர்க்களத்திற்கு மற்றொரு நாடு வந்தால் வரலாற்றில் இல்லாத அழிவை தருவோம் என்று எச்சரித்து இருந்தார். இதனால் பிற நாடுகளில் இருந்து கிடைக்கும் உதவியை வைத்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி போர் நடத்தி வருகிறார்.
ரஷியாவின் மீது வரலாற்றில் இருந்த பொருளாதார தடையை மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் விதித்துள்ள காரணத்தால், அதன் பொருளாதாரம் கேள்விக்குரியனாலும் உக்ரைனை கைப்பற்றாமல் ஓயமாட்டோம் என ரஷியா செயல்பட்டு வருகிறது. இந்தியா, அரபு அமீரகம் மற்றும் சீனா போன்ற நாடுகள் உக்ரைன் - ரஷியா பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என இருநாட்டு அதிபர்களிடமும் கோரிக்கை வைத்து நடுநிலை வகிக்கின்றன.
மேலும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொண்டு வரும் இராணுவ தளவாட வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ரஷியா எச்சரித்து இருந்தது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம். உக்ரைன் நாட்டு அகதிகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும். பணம், உணவு போன்ற மனிதாபிமான உதவிகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.