இந்தியா குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தவறாக பேசிய பாகிஸ்தான்; கண்டனம் தெரிவித்த இந்தியா..!!



UN about India Pakistan spoke wrongly at Human Rights Council; Condemned by India..

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தான் இந்தியா குறித்து தவறாகப் பேசியது. இந்தியா, பாகிஸ்தானின் இந்த செய்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தான் இந்தியா குறித்து தவறாக பேசியது. இந்தியா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் சீமா புஜானி இது குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பேசுகையில், இந்தியாவுக்கு எதிரான தவறான பிரசாரத்தை செய்வதற்கு பாகிஸ்தான் பிரதிநிதி மீண்டும் இந்த சிறப்பான மன்றத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். 

பாகிஸ்தான், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் புகலிடம் கொடுத்துள்ள தனித்துவமான வேறுபாட்டை கொண்டுள்ளது. ஐநாவால் தடை செய்யப்பட்டு இருந்த சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன், பாகிஸ்தான் ராணுவ அகாடமி அருகேதான் வாழ்ந்தார். 

சர்வதேச பயங்கரவாதிகளான ஹபீஸ் சயீத், மசூத் அசார் ஆகியோரை பல வருட காலமாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்புகள்தான் புகலிடம் தந்து, வளர்த்து விட்டன என்று கூறியுள்ளார்.