பாலிவுட்டில் எண்ட்ரியா?? ஓபனாக நடிகர் சூர்யா சொன்ன பதில்.! சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!
இறுதிக்கட்ட கெடு விதித்த ரஷியா.. உக்ரைனுக்கு "Judgement Day" இந்த நாள் தான்... பகீர் தகவல்.!
நாஜி படைகளை வென்ற நாள் கொண்டாட்டத்திற்குள் உக்ரைனை முழுவதுமாக ரஷிய படைகள் கைப்பற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து சென்று, ஒரு மாதத்தை கடந்தும் போர் தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ், கார்கிவ் மற்றும் மரியுபோல் உட்பட பல்வேறு நகரங்களில் ரஷிய படைகள் இடைவிடாத தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும், உக்ரைன் நாட்டில் பல்முனை தாக்குதல் நடைபெறுகிறது. உக்ரைனில் உள்ள சில நகரங்கள் ரஷியாவசம் வந்துள்ளது.
தலைநகர் கீவ், கார்கிவ் நகரங்களில் ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் இராணுவத்தினர் கடும் சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையில், உக்ரைன் மீதான படையெடுப்பை மே 9 ஆம் தேதிக்குள் நிவர்த்தி செய்து, உக்ரைனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும் ரஷிய படைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மே மாதம் 9 ஆம் தேதி ரஷ்ய நாட்டில் ஜெர்மனியின் நாஜி படையினை ரஷியா வெற்றிகண்ட நாள் கொண்டாடப்படுகிறது. இதனால் அதற்குள் உக்ரைனை முழுவதும் கைப்பற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உக்ரைன் நாட்டை சேர்ந்த மக்கள் வலுக்கட்டாயமாக ரஷியாவுக்கு அழைத்து செல்லப்படுவதாகவும் உக்ரைன் குற்றசாட்டை முன்வைத்துள்ளது.