கொரோனா எதிரொலி: இரண்டு வீட்டின் மொட்டைமாடிக்கு இடையே டென்னிஸ் விளையாடும் இளம் பெண்கள்.! வைரல் வீடியோ.!

கொரோனா எதிரொலி: இரண்டு வீட்டின் மொட்டைமாடிக்கு இடையே டென்னிஸ் விளையாடும் இளம் பெண்கள்.! வைரல் வீடியோ.!


Two young girls in Italy play tennis across their rooftops

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் சோகத்தையும், இழப்புகளையும் ஏற்படுத்திவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் தீவிரமாக போராடிவருகிறது.

கொரோனாவை தடுக்கும் ஒரு முயற்சியாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் வரும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். இதுபோன்ற சமயத்தில் பொழுது போக்கிற்காக பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளிலையே ஏதாவது விளையாட்டை விளையாடி வருகின்றனர்.

corono

இந்நிலையில், இத்தாலி நாட்டை சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் இரண்டு வீடுகளுக்கு இடையே, அதவது சாலைக்கு இருபுறங்களிலும் இருக்கும் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து டென்னிஸ் விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.