தன்னைத்தானே திருமணம், விவாகரத்து., தற்போது தற்கொலை.. 26 வயதில் முடிந்த கதை.!
துருக்கி நாட்டில் வசித்து வரும் பெண்மணி குப்ரா ஐக்குத் (Kubrai Aykut). சமூக வலைத்தளத்தில் மிகவும் அறியப்பட்ட பெண்மணியாக இருந்து வரும் இவருக்கு 26 வயது ஆகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, இவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வதாக அறிவித்து இருந்தார்.
திருமணம், விவாகரத்து
இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் தான் தன்னைத்தானே திருமணம் செய்து வாழ்ந்த நிலையில், தனிமையில் பல நாட்கள் தவித்ததாகவும், இதனை தன்னைத்தானே விவாகரத்து செய்துகொள்ளப்போவதாகவும் அறிவித்து இருந்தார்.
தற்கொலை செய்து உயிர் மாய்த்து சோகம்
இந்நிலையில், அவர் தனது வீட்டின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அங்குள்ள சுல்தான்பெயில் மாவட்டத்தில் இருக்கும் சொகுசு விடுதியில் தங்கியிருந்தவர், கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
அவர் உடல் எடையை அதிகரிக்க முயற்சித்த நிலையில், ஒரு நாள் ஒன்றுக்கு 1 கிலோ அதிகரிக்க முயன்றும் பலனில்லாததால் தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பு எழுதி வைத்து இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.