#வீடியோ: ஒரு நொடியில் போக இருந்த உயிர்.. சாதுர்யமாக தப்பித்த இளைஞர்.. வைரல் வீடியோ..Turkey man escaped from huge accident viral video

கான்க்ரீட் பூச்சு தலையில் விழ இருந்த நிலையில், இளைஞர் ஒருவர் நொடிப்பொழுதில் தப்பித்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

துருக்கி நாட்டில் பெய்துவரும் மழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக கட்டிடம் ஒன்றின் மேலிருந்த கான்க்ரீட் பூச்சு இடிந்து அங்கிருந்த சாலையில் விழுந்துள்ளது. அப்போது இளைஞர் ஒருவர் கார் ஒன்றின் மீது சாய்ந்துகொண்டே செல்போன் பயன்படுத்திக்கொண்டிருந்த நிலையில், கான்க்ரீட் பூச்சு தனது தலையில் விழப்போவதை கவனித்துள்ளார்.

உடனே அந்த இடத்தில் இருந்து அவர் நகர, அடுத்த நொடியே அந்த கான்க்ரீட் பூச்சு அந்த இடத்தில் விழுகிறது. கான்க்ரீட் பூச்சு கீழே விழுவதை கவனிக்காமல் இருந்திருந்தால் அந்த இளைஞர் நிச்சயம் பெரிய ஆபத்தை சந்தித்திருக்க கூடும். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.