வெள்ளை மாளிகையில் நடந்த முக்கியமான மீட்டிங்! அந்த சீரியஸான நேரத்தில் அதிபரை சிரிக்க வைத்த 2 வயது சிறுவன்! தாய் சொன்ன அந்த வார்த்தையை கேட்டு கலங்கிய டிரம்ப்!!!
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்று, எதிர்பாராத விதமாக உணர்ச்சிப் பொங்கலாக மாறியது. இரண்டு வயது சிறுவனின் மழலைச் சேட்டைகளும், அவன் மீண்டெழுந்த வாழ்க்கைக் கதையும் அங்கிருந்தோரை நெகிழச் செய்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கூட இதைக் கண்டு வியப்பை வெளிப்படுத்தினார்.
மழலைச் சேட்டைகள் சிரிப்பை ஏற்படுத்தியது
மருந்து விலையை குறைக்கும் அரசுத் திட்டங்களை ஒட்டி வெள்ளை மாளிகையில் நிகழ்ச்சி நடந்தது. அதில் அதிபர் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, சியரா ஸ்மித் மடியில் இருந்த இரண்டு வயது டிராவிஸ் ஸ்மித் திடீரென கீழே இறங்கி விளையாடத் தொடங்கினான். தரைவிரிப்பில் உருண்டோடி, குப்புறப் படுத்துக் கொண்ட அவனது சுறுசுறுப்பு அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தது. இதனால் உரை நடுவே சிறிய இடைவெளி ஏற்பட்டது.
பிறந்ததிலிருந்தே கேட்க முடியாத நிலை
அதன்பின் அந்தச் சிறுவனைப் பற்றி அதிபர் ட்ரம்ப் கேட்டபோது, அவன் வாழ்க்கைச் சுருக்கம் அனைவரையும் அமைதியாக்கியது. டிராவிஸ் பிறந்தபோதே 100% செவித்திறன் இழந்தவன் என தாய் தெரிவித்தார். ‘OTOF’ என்ற அரிதான மரபணு மாற்றம் காரணமாக, தாய் அழைத்தாலும், பெயரைச் சொன்னாலும் கூட அவனால் கேட்க முடியாத நிலை இருந்தது. இந்த தகவல் நிகழ்ச்சியின் கவனத்தை முழுவதும் ஈர்த்தது.
இதையும் படிங்க: அந்த மனசு இருக்கே.... சொல்ல வார்த்தையே இல்ல! பள்ளியில் தாய்க்காக மகன் செய்த செயல்! அந்த காட்சியை நீங்களே பாருங்க! நெகிழ்ச்சி வீடியோ!!!
ஜீன் தெரபி மாற்றிய வாழ்க்கை
18 மாதங்கள் ஆனபோது, அங்கீகரித்த Gene Therapy சிகிச்சை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட அறுவை சிகிச்சையும் வெற்றியடைந்தது. இதன் பலனாக, முழுமையாக செவித்திறன் இழந்திருந்த சிறுவன் இப்போது தாயின் குரலையும் இசையையும் கேட்கும் நிலைக்கு வந்துள்ளான். இந்த மாற்றம் மருத்துவ துறையில் பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்த தகவலைக் கேட்ட , “இது உண்மையிலேயே ஒரு அதிசயம். இப்போது அவனால் தனது தாயின் குரலைக் கேட்க முடிகிறது” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மருந்து விலை குறைப்பு ஒப்பந்தங்களின் மூலம், செவித்திறன் போன்ற சிகிச்சைகளும் பொதுமக்களுக்கு எட்டும் என்பதைக் காட்டும் உதாரணமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
“He didn’t know his name. He couldn’t hear me tell him how much I love him — and now, with @Regeneron, and this amazing surgery, he can listen to music… now he can hear…”@POTUS: “That’s incredible… that’s a beautiful boy.” ❤️ https://t.co/9oWgwHQX0N pic.twitter.com/C7WbftQ3B8
— Rapid Response 47 (@RapidResponse47) April 23, 2026
இதையும் படிங்க: திருமண வீட்டில் மாப்பிள்ளையிடம் விளையாட்டாக நண்பர்கள் செய்த விஷயம் வினையாக முடிந்தது! பதைப்பதைக்க வைக்கும் வீடியோ..!!!