வியட்நாமில் சோகம்... கான்கிரீட் குழாயில் தவறி விழுந்த சிறுவன்.. பரிதாபமாக பலியான சம்பவம்..!

வியட்நாமில் சோகம்... கான்கிரீட் குழாயில் தவறி விழுந்த சிறுவன்.. பரிதாபமாக பலியான சம்பவம்..!


Tragedy in Vietnam... A boy who fell into a concrete pipe.. Tragically died..!

வியட்நாமில் 115 அடி ஆழ கான்கிரீட் குழாய்க்குள் தவறி விழுந்த சிறுவனை நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வியட்நாமில் டோங் தெப் மாகாணத்தில் உள்ள 35 மீட்டர் கொண்ட கான்கிரீட் குழாயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுவன் ஒருவன் தவறி விழுந்துள்ளான். மேலும் இந்த குழாய் ஆனது 25 சென்டிமீட்டர் மட்டுமே அகலம் கொண்டதால் சிறுவனை மீட்பதில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Vietnam

இதனைத்தொடர்ந்து குழாயை சுற்றி நவீன இயந்திரங்கள் மூலம் பள்ளம் தோன்றி அந்நாட்டு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மீட்பு பணிகள் அனைத்தும் தோல்வி அடைந்ததால் சிறுவன்  சடலமாக மீட்கப்பட் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.