மலையில் இருந்து வந்த மர்ம குரல்! டிராகன் என எண்ணி படையெடுத்துச் சென்ற ஆயிரக்கணக்கான மக்கள்! ஆனால் அங்கு இருந்தது என்ன தெரியுமா?

மலையில் இருந்து வந்த மர்ம குரல்! டிராகன் என எண்ணி படையெடுத்துச் சென்ற ஆயிரக்கணக்கான மக்கள்! ஆனால் அங்கு இருந்தது என்ன தெரியுமா?


Thousands of Chinese villagers hunt for mysterious creature

சீனாவில் xiushui என்ற பகுதியில் அமைந்துள்ள மலையிலிருந்து திடீரென மர்மமான அலறல் சத்தம் ஒன்று கேட்டுள்ளது. இந்நிலையில் அந்த மர்ம குரல் மிகப்பெரிய விலங்கான டிராகன் உடையதாக இருக்கலாம் என எண்ணிய அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அதனை காண்பதற்காக, வேட்டையாடுவதற்காக படையெடுத்து மலைப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள், விலங்கியலாளர்களை அங்கு அனுப்பி அந்த சத்தத்தை எழுப்பும் உயிரினம் என்ன என்பதை கண்டறிய உத்தரவிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற அவர்கள் அதிரவைக்கும் வகையில் கேட்ட அந்த மர்மசத்தம் டிராகன் உடையது அல்ல,  அதனை எழுப்பியது மிகச்சிறிய அளவிலான yellow legged buttonquail என்ற பறவையுடையது  என கண்டறிந்தனர்.  அந்த பறவையின் சத்தம் 328 அடி தூரம் கேட்கக் கூடியது. மேலும் அவை இனப்பெருக்க  நேரத்தில் அவ்வாறு சத்தம் எழுப்பும் எனவும்  கண்டறிந்துள்ளனர். 

china

அதனைத் தொடர்ந்து டிராகனை காண ஆர்வமாக வந்த அப்பகுதி மக்கள் மர்ம சத்தத்தை எழுப்பிய சிறிய பறவையை கண்ட பின் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.