நள்ளிரவில் திடீரென அலறிய மகள்.! ஓடிச்சென்று தந்தை கண்ட காட்சி..! வைரலாகும் வீடியோ.



Thief caught in cctv camera

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் டெரிக். இவரது மகள் ஏவா. 11 வயதாகும் ஏவா தனது வீட்டில் தனி அறையில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் திடீரென அலறியுள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்டு டெரிக் மகளின் அறைக்கு சென்று பார்த்ததில் மர்மநபர் ஒருவர் ஏவாவை தள்ளிவிட்டு ஓடியுள்ளார்.

டெரிக் அந்த மர்ம நபரை துரத்தி பிடிக்க முயன்றுள்ளார். ஆனால், அந்த நபர் ஓடிவிட்டார். உடனே இதுகுறித்து டெரிக் அருகில் இருந்த காவல் நிலையில் புகார் கொடுக்க, அங்கிருந்த CCTV காட்சிகளை வைத்து போலீசார் 21 வயதாகும் ஸ்டீபன் என்பவரை கைது செய்துள்ளன்னர்.

அவரிடம் விசாரித்ததில், தான் டெரிக் வீட்டிற்கு திருட சென்றதாகவும், ஏவா தன்னை பார்த்துவிட்டதால் அவரை கீழே தள்ளிவிட்டு தப்பித்து சென்றதாகவும் ஸ்டீபன் கூறியுள்ளார். ஸ்டீபன் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.