BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
கலிபோர்னியாவை தாக்கிய புயல்.. எச்சரிக்கும் தேசிய வானிலை மையம்.. பீதியில் மக்கள்..!
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகணத்தில் திடீரென ஏற்பட்ட புயல் மற்றும் மழைக் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். மேலும் பலத்த காற்று காரணமாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தேசிய வானிலை ஆய்வு மையமானது வரும் நாட்களில் வானிலை மாற்றம் மிகவும் மோசமடைய கூடும் என்று கூறியுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மோசமான வானிலை காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, கனமழை போன்றவை ஏற்படக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.