த்ரிஷாவை விட வயது குறைவு... ஆனால் அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை! யார் தெரியுமா?
2 வாரங்களில் ஊர் திரும்ப வேண்டிய மகன்.. அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவம்.. கதறும் பெற்றோர்..!

ஆந்திர மாநிலம் பாலக்கொள்ளு கிராமத்தை சேர்ந்தவர் வீரா. இவர் தனது கல்லூரி படிப்பிற்காக அமெரிக்கா சென்றிருந்தார். மேலும் தனது முதுகலை படிப்பின் இறுதியாண்டை முடித்துவிட்டு இன்னும் இரண்டு வாரத்தில் இந்தியா திரும்ப முடிவு செய்து இருந்துள்ளார். வீரா நடுத்தர குடும்ப வர்க்கத்தை சேர்ந்தவர் என்பதால் கல்லூரி படிப்புடன் சேர்த்து தனது கை செலவிற்காக அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பகுதிநேர ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கொள்ளையர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் வீரா பணிபுரியும் பெட்ரோல் நிலையத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது வீரா அதனை தடுக்க முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கொள்ளையர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இந்த கொடூரத் தாக்குதலில் வீரா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனையடுத்து அமெரிக்காவில் படிக்க சென்ற தங்களது மகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த செய்தி கேட்டு வீராவின் பெற்றோர் கதறி துடித்தனர். மேலும் வீராவின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஆந்திர அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.