கிரிக்கெட்டில் இருந்து விலகல்.. அரசியலில் தனது 2வது இன்னிங்சை தொடங்கும் வங்கதேச வீரர்.!

கிரிக்கெட்டில் இருந்து விலகல்.. அரசியலில் தனது 2வது இன்னிங்சை தொடங்கும் வங்கதேச வீரர்.!



the-captain-of-the-bangladesh-cricket-team-jumped-into

வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான சாஹிப் அல்ஹசன் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். அண்மையில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இவரது தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி தொடர் தோல்வியை சந்தித்தது. அதோடு இலங்கை வீரர் மேத்யு டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்த விவகாரத்தில் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகிப் அல்ஹசன் கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.

bangladesh

இந்த நிலையில் தான், அவர் திடீரென்று ஒரு அரசியல் கட்சியில் இணைந்துள்ளார். அதுவும் வங்கதேசத்தில் ஆளுங்கட்சியான வங்கதேசம் அவாமி லீக்கில் இணைந்திருக்கிறார். அவரை வேட்பாளராக நிறுத்த அந்த கட்சி தயாராக இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக, அவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து அரசியலில் நுழைந்து 2வது இன்னிங்ஸை ஆரம்பிக்கயிருக்கிறார் என்று தெரிகிறது.

அவருடைய வேட்புமனுவை அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற வாரியம் உறுதி செய்ய வேண்டும். அப்படி உறுதி செய்தால், அவர் ஒட்டுமொத்தமாக 3 தொகுதிகளில் போட்டியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் அவர் தன்னுடைய சொந்த மாவட்டமான மகரா அல்லது தலைநகர் டாக்காவில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது வங்கதேசத்தில் ஆளும் கட்சியின் இணைப்பொதுச் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

bangladesh

இதற்கிடையில், சுமார் 170 மில்லியன் மக்கள் வசித்து வரும் வங்கதேசத்தில் சென்ற 15 வருடங்களாக ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்சமயம் வங்கதேசத்திலிருக்கின்ற முக்கிய எதிர் கட்சிகள் எதிர்வரும் தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன. அப்படி புறக்கணித்தால், ஷேக் ஹசீனா 4 வது முறையாக ஆட்சியை பிடிப்பார் என்பது உறுதியாகும்.