29வது மாடியில் இருந்து குதித்த ஸ்கைடைவருக்கு நேர்ந்த விபரீதம்! அதிர்ச்சி வீடியோ!

29வது மாடியில் இருந்து குதித்த ஸ்கைடைவருக்கு நேர்ந்த விபரீதம்! அதிர்ச்சி வீடியோ!



Thailand skydiver death

தாய்லாந்தில் 29 வது மாடி கட்டிடத்தில் இருந்து ஸ்கைடைவிங் செய்யும்போது பாரஷூட் வேலை செய்யாததால் கீழே விழுந்து அந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் பிரபல ஸ்கைடைவர் 29 வது மாடி கட்டிடத்தில் இருந்து ஸ்கைடைவிங் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத வகையில் பாரஷூட் வேலை செய்யாததால் கீழே விழுந்து உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து நேற்று மாலை நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் 35 வயதான நபர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர் தனது நண்பர்களுடன் ஸ்கைடைவிங் செய்ய வந்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

thailand

மேலும், அவர் 29வது மாடியில் இருந்து குறித்த பிறகு பாரஷூட் வேலை செய்யாததால், தரையில் விழுந்து உடல் சிதறி உயிரிழந்ததாக இந்த விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.