பயங்கர விபத்து.. ஜெட் விபத்தில் 6 பேர் பலி... ஃபெடரல் நிர்வாகம் விசாரணை.!

அமெரிக்காவில் வணிக ஜெட் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் அந்த விமானத்தில் பயணம் செய்த ஆறு பேரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கலிபோர்னியா நகருக்கு அருகேவுள்ள பிரெஞ்சு பள்ளத்தாக்கில் அதிகாலை நேரம் 4:15 மணிக்கு விமானம் விழுந்து.
இந்த விபத்து குறித்து ஃபெடரல் விமான நிர்வாகம் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையின் படி ஆறு பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அதிகாலை 4;15 மணியளவில் நான் ஸ்வேகாஸ் நகரின் ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் விழுந்து நொறுங்கியதாக தெரிவித்திருக்கிறது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஆறு பேருமே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ள நிர்வாகம் விமானம் விழுந்து நொறுங்கியதில் ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு தாவர பயிர்கள் எரிந்து சாம்பல் ஆனதாகவும் தெரிவித்திருக்கிறது. பணியாளர்களின் விவரம் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவித்திருக்கிறது.