Video : விவசாயியின் மாட்டுக் கொட்டகையில் வத வதன்னு வெளியே வந்த 60 நாகப்பாம்புகள்! குடும்பமே இங்க தான் போல.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்!



snake-rescue-in-mandsaur-shocks-locals

 மத்திய இந்தியாவின் மண்ட்சோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்து இருக்கும் அபூர்வமான நிகழ்வு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயியின் மாட்டுக் கொட்டகையில் இருந்து ஒரே நேரத்தில் 60 சிறிய நாகப்பாம்புகள் வெளியே வந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தகவல் அறிந்தவுடன் பாம்பு பிடிப்பாளர் ஒருவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனைத்து பாம்புகளையும் பாதுகாப்பாக ஒரு பெட்டியில் வைத்து, அருகிலுள்ள வனப்பகுதியில் விடுவித்தார். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்பது முக்கிய தகவலாகும். மீட்கப்பட்ட பாம்புகள் அனைத்தும் உயிருடன் பாதுகாப்பாக வனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வனத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, “இது மத்திய இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நாகப்பாம்பு கூட்டமாகும்” என கூறியுள்ளனர். மேலும், மொத்தம் 100க்கும் மேற்பட்ட நாகப்பாம்புகள் குழியிலிருந்து வந்ததாகவும், அதில் 60 பாம்புகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிவன் கோவிலுக்குள் நுழைந்த 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு! தலை தெறிக்க ஓடிய பக்தர்கள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

 

இதையும் படிங்க: Video: உணவில் எச்சில் துப்பி பேக் செய்யும் வாலிபர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.....