தைவானில் அதிபயங்கர நிலநடுக்கம்.. பதறிப்போன மக்கள் வீதிகளில் தஞ்சம்.!taiwan-earthquake-today

தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில், இன்று இரவில் உள்ளூர் நேரப்படி 09:30 மணியளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டைட்டங் நகருக்கு 50 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

Taiwan

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கட்டுமானங்கள் பயங்கரமாக குலுங்கியுள்ளது. பொதுமக்கள் பதறியபடி வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.