உலகம்

"இந்தியாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்; இந்தியாவை நான் மிகவும் நேசிக்கிறேன்" என்று கூறிய வெளிநாட்டு அதிபர்; யார் தெரியுமா?

Summary:

susma suvaraj - amrica athipar donald drem

ஐநா சபையின் தலைமையகம் அமைந்துள்ள நியூயார்க்கில் உலக போதைப் பொருள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.  இந்தியாவின் சார்பில் வெளிஉறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார்.

இந்த கூட்டம் முடிந்ததும் ஐநாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே சுஷ்மா சுவராஜ் கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். அதன்பிறகு அவர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரெம்பிடம் சுஷ்மா சுவராஜ் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Related image

சுஷ்மா சுவராஜ் அவரிடம் இந்தியாவின் சார்பில் மோடியின் அன்பை பெற்று வந்துள்ளேன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.  தொடர்ந்து ட்ரெம்ப் அவரிடம் கூறுகையில் "இந்தியாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் இந்தியாவை நேசிக்கிறேன்" எனது அன்பை நண்பர் நரேந்திர மோடியிடம்  தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார்.


Advertisement