பாலியல் தொல்லை கொடுத்த கணவன், மனைவிக்கு மரணதண்டனை! சூடான் நாட்டில் நடந்த உண்மை சம்பவம்!

பாலியல் தொல்லை கொடுத்த கணவன், மனைவிக்கு மரணதண்டனை! சூடான் நாட்டில் நடந்த உண்மை சம்பவம்!


sudan-girl-arrested-for-murder-case

தன்னை வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கணவரை கத்தியால் குத்தி கொன்ற மனைவிக்கும் மரணதண்டனை வழங்கவேண்டும் என்று வக்கீல்கள் போர்க்கொடி பிடித்துள்ளனர்.

சூடான் நாட்டை சேர்ந்த Noura Hussein(19) என்ற இளம் பெண்ணிற்கு 16 வயதில் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த திருமணத்தில் சற்றும் விருப்பம் இல்லாத Noura தனது பெற்றோருடன் செல்ல விரும்பியுள்ளார். 

ஆனால் இவரது விருப்பத்தை நிராகரித்த இவரது மாமியார் வீட்டார் இவரை மூன்று வருடங்கள் வீட்டில் அடைத்துவைத்து சித்திரவதை செய்துள்ளார். மேலும் இவரது கணவர் இவரை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் தனது கணவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் போலீசார் இவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இவருக்கு சூடான் நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை வழங்குவதாக அறிவித்திருந்தது.

Crime

அதன் பின் சூடான் நாட்டின் சட்டப்படி மறுபரிசீலனை செய்யப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை 5 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் அபராதமாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் அந்நாட்டின் அரசு வழக்கறிஞர்கள் அவருக்க சிறைதண்டனை போதாது மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த வழக்கு மீண்டும் பராபரை ஏற்படுத்தியுள்ளது.