உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்! கண்ணிமைக்கும் நொடியில் பல்கலைக்கழக மாணவர் எடுத்த விபரீத முடிவு!

உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்! கண்ணிமைக்கும் நொடியில் பல்கலைக்கழக மாணவர் எடுத்த விபரீத முடிவு!



student-dead-in-saudi-arafia-for-cororno-virus-fear

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளின்எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. மேலும் இதுவரை சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 1770பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 71000க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 28 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

இந்நிலையில் சவுதி அரேபியா கிங்ஸ் அப்துல்அஸீஸ் பல்கலைக்கழகத்தில் 30 வயது மிக்க மாணவர் ஒருவர் படித்து வந்துள்ளார். மேலும் அவர் கடந்த 8 மாதங்களாக சவுதி அரேபியாவில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில காலங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 

saudi arafia

ஆனால் அவருக்கு  பரிசோதனை முடிவுகளில் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்தது மேலும் அதற்கான இறுதி முடிவிற்காக மருத்துவர்கள் அந்த இளைஞரிடம் எதுவும் சொல்லாமல் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தவறாக புரிந்துகொண்ட அந்த மாணவர் மருத்துவமனையில் தனது அறையில் உள்ள ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

இதுகுறித்து கிங் பஹத் மருத்துவமனை மற்றும் சவுதி போலீசார் உறுதி செய்துள்ளனர். மேலும் அவர் எந்த நாட்டைச் சேர்ந்த மாணவர் என்ற தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.