வீட்டில் இருந்தபடியே வலியில்லாமல் 'மருக்கள்' உதிர வைக்க இந்த ஒரு பொருள் போதும்! ட்ரை பண்ணி பாருங்க!



remove-skin-warts-home-remedies-tamil

சரும அழகை கெடுக்கும் மருக்கள் பலருக்கும் மனஉளைச்சலை ஏற்படுத்தும் ஒன்று. வலி இல்லாவிட்டாலும், வெளிப்படையாகத் தெரியும் மருக்கள் நம்மை சங்கடப்படுத்துகின்றன. இதற்காக அதிக செலவு செய்யாமல், வீட்டிலேயே முயற்சிக்கக்கூடிய எளிய வழிகள் உள்ளன.

மருக்கள் ஏன் தொந்தரவு தருகிறது?

கை, கால், முகம், அக்குள் உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் தோன்றும் மருக்கள் பார்ப்பதற்கு அசிங்கமாகத் தோன்றும். இதனால் பலர் பார்லர் அல்லது மருத்துவமனை தேடி செல்கிறார்கள். ஆனால் சில வீட்டு வைத்தியம் முறைகள் இதற்கு நல்ல தீர்வாக அமையலாம்.

Skin Warts Removal

வெள்ளைப்பூண்டு வைத்தியம்

மருக்களை நீக்க மிகவும் பயனுள்ள இயற்கை மருந்தாக வெள்ளைப்பூண்டு கருதப்படுகிறது. இதற்கு 6–7 வெள்ளைப்பூண்டு பற்களை தோல் உரித்து நன்றாக பேஸ்ட் செய்து, அதிலிருந்து சாற்றை மட்டும் எடுக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை

வெள்ளைப்பூண்டு சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை மருக்கள் இருக்கும் இடத்தில் பூசி, ஒரு மணி நேரம் அப்படியே விட்டு பின்னர் கழுவ வேண்டும். தொடர்ந்து 4–5 நாட்கள் செய்தால் மருக்கள் தானாக உதிர்ந்து விடும்.

இந்த எளிய முறையை சரியாக பின்பற்றினால், மருக்கள் பிரச்சனைக்கு இயற்கை தீர்வு கிடைக்கும். சருமத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் இந்த வீட்டுவைத்தியம், தேவையற்ற செலவையும் கவலையையும் குறைக்கும் ஒரு எளிய வழியாக இருக்கிறது.