கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்! பிரபல ஹோட்டலின் திடீர் முடிவால் பேரதிர்ச்சி! தீயாய் பரவும் புகைப்படம்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்! பிரபல ஹோட்டலின் திடீர் முடிவால் பேரதிர்ச்சி! தீயாய் பரவும் புகைப்படம்!



srilanka hotel not allowed chinese for eat

சீனாவில் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உஹான் நகரில் உருவாக்கிய கொரனோ வைரஸ் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொரனோ வைரஸ் பாதிப்பினால் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் உலகம் முழுவதும் 10000க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.

இந்தக் கொடிய வைரஸ் சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து, உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி வருகிறது. மேலும் தற்போது அந்த பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. மேலும் அந்த வைரஸ் குணம்செய்ய இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

Coronovirus

மேலும் சீனாவில் இருந்த பலநாட்டினரும் நாடு திரும்பி வருகின்றனர். இந்நிலையில்  இலங்கையில் இருக்கும் உணவகம் ஒன்றில் சீனா நாட்டினருக்கு உணவு கிடையாது என்று வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சமீபத்தில் இலங்கையில் உள்ள பெண் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். அவை உறுதிசெய்யப்பட்ட நிலையில் பல நாடுகளிலும் சீன நாட்டவர்களுக்கு பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொழும்பில் உள்ள உணவகம் ஒன்று  சீன மக்களுக்கு இங்கே உணவு வழங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு பலகையை அந்த ஹோட்டலின் நுழைவாயிலில் வைத்துள்ளது.