சூரிய புயலினால் 40 செயற்கைகோள்கள் எரிந்து நாசம் - ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவிப்பு.!

சூரிய புயலினால் 40 செயற்கைகோள்கள் எரிந்து நாசம் - ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவிப்பு.!



Space X Announce 40 Satellite Destroyed by Solar Storm

பூமியின் வான்வெளி சுற்றுவட்டப்பாதையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 2 ஆயிரம் ஸ்டார்லிங்க் செயற்கைகோள்கள் சுற்றி வருகிறது. இதன் வாயிலாக உலகத்தின் தொலைதூர பகுதிகளுக்கும் இணையசேவை வழங்கப்படுகிறது. 

செயற்கைகோள்கள் அனைத்தும் பூமியில் இருந்து 340 மைல்கள் (547.1 கி.மீ) உயரத்தில் சுற்றி வருகிறது. இவ்வாறு விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைகோள்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட 40 செயற்கைகோள்கள் சூரிய புயலில் சிக்கி எரிந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் தேதி வளிமண்டலத்தில் சூரியப்புயல் ஏற்பட்டு, வளிமண்டலம் அடர்த்தியாகியுள்ளது. 

world

இதனால் கடந்த வாரத்தின் போது விண்ணில் செலுத்தப்பட்ட 49 சிறிய ரக செயற்கைகோளில், 40 செயற்கைகோள் புவிவட்ட பாதையில் விலகி மீண்டும் வளிமண்டலத்திற்குள் நுழைந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. 

சில செயற்கைகோள்கள் புவிவட்ட பாதையில் இருந்து விலகும் சூழலில் உள்ள நிலையில், இறுதிக்கட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. செயற்கைகோள்கள் எரிந்துள்ளதால் புவிவட்ட பாதை அல்லது பூமிக்கு எந்த ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.