ஆசை ஆசையாக வளர்ந்துவந்த மலை பாம்புகள்! காரில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.

ஆசை ஆசையாக வளர்ந்துவந்த மலை பாம்புகள்! காரில் சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.


Snakes missed in car at america

அமெரிக்காவை சேர்ந்தவர் கண்டி. பாம்புகள் மீது அதிகம் ஆர்வம் கொண்ட இவர் தன் வீட்டில் மலை பாம்புகளை வளர்த்து வந்துள்ளார். அந்த பாம்புகளை வைத்து இன பெருக்கம் செய்வதும் அவற்றை விற்பனை செய்வதையும் தொழிலாக செய்துவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பிரபல நூலகம் ஒன்றிற்கு பாம்புகள் பற்றிய விளக்கம் கொடுப்பதற்காக தனது பாம்புகளை பையில் எடுத்துபோட்டுக்கொண்டு தனது காரில் சென்றுள்ளார். தனது பாம்புகளை காரில் வைத்துவிட்டு நூலகத்திற்குள் சென்றுவிட்டு மீண்டும் தனது காரை வந்து பார்த்த கண்டிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Mystery

காரில் வைத்திருந்த கண்டியின் பாம்புகள் அனைத்தும் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கண்டி தனது பாம்புகளை யாரோ திருடி விட்டார்கள் என்றும், தனது பாம்பின் பெயர், நிறம் இவற்றை கூறி தனது பாம்பை பார்த்தவர்கள் தன்னிடம் தெரிவிக்குமாறு சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கண்டி.

மேலும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் கண்டி. அங்கிருக்கும் வீடியோ காட்சிகளை சோதனை செய்து திருடனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்னனர் போலீசார்.