
Sharks attacked a girl in america
கரீபியன் கடலில் குளித்துக்கொண்டிருந்த அமெரிக்க மாணவி ஒருவர் சுறா தாக்குதலில் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஜோர்டன் லிண்ட்சே (21) என்ற மாணவி, தன்னுடைய பெற்றோருடன் கரீபியன் பகுதியில் உள்ள பஹாமாஸ் தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
படந்துவிரிந்த கடலை பார்த்ததும் ஜோர்டனுக்கு கடலில் இறங்கி குளிக்கவேண்டும் என்று ஆசை வந்துள்ளது. தனது ஆசையை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார் அந்த பெண். அந்த கடல் பகுதியில் சுறாக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் கடலில் இறங்கி குளிக்கவேண்டாம் என்று பெற்றோர் எச்சரித்துள்ளனனர்.
பெற்றோரின் பேச்சையும் கேட்காமல் கடலில் இறங்கி குளிக்க ஆரம்பித்துள்ளார் ஜோர்டன். அவர் கடலில் இறங்கிய சில நிமிடத்தில் மூன்று சுறாக்கள் சேர்ந்து ஜோர்டனை தாக்க ஆரம்பித்துள்ளது.
சுறாக்களின் தாக்குதலில் அவருடைய வலதுகை கிழிந்து தொங்கியுள்ளது. மேலும் அவரது இடது கை, கால்கள் மற்றும் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே சுறாக்களிடம் இருந்து அந்த பெண்ணை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜோர்டன் மரணமடைந்தார்.
Advertisement
Advertisement