அதிர்ச்சி சம்பவம்! பள்ளி சிறுமியின் கழுத்தில் கத்தி! பக்கத்துல வந்த அறுத்துருவேன் மிரட்டிய சிறுவன்! சினிமாவை மிஞ்சிய மிரட்டல்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!



schoolgirl-threatened-knife-satara-video

மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு பள்ளி மாணவியை மைனர் சிறுவன் ஒருவர் கத்தியுடன் மிரட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த சிறுவன், மாணவியை பிடித்து யாரும் அருகில் வரக்கூடாது என கூறி கத்தி காட்டி பயமுறுத்துகிறார். இது ஒரு திரைப்படத்தைக் போல் இருந்தாலும், உண்மையில் நடந்ததால்தான் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வீடியோவில், பின்னால் இருந்து ஒருவரால் மாணவி திடீரென காப்பாற்றப்படுகிறார். அந்த இளைஞர் சிறுவனிடமிருந்துக் கத்தியைக் பறித்து மாணவியை பாதுகாக்கிறார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சேர்ந்து உதவியுடன் மாணவியை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். பின்னர் அந்த சிறுவனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது காதல் தகராறு காரணமாக நடந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த சிறுவன் மீது போக்சோ சட்டம், பாலியல் குற்றச்சாட்டு, ஆயுதச் சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என சதாரா மாவட்ட எஸ்பி துஷார் தோஷி தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: மொபைல் போனில் முழு கவனமும் இருந்ததால் ரயிலை தவறவிட்ட முதியவர்! பதட்டத்தில் செய்த அதிர்ச்சி செயல்! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்! வைரலாகும் வீடியோ..

 

இதையும் படிங்க: வகுப்பறையில் டீச்சர் செய்யுற வேலையா இதெல்லாம்! தலைக்கு எண்ணெய் தடவி, இசை கேட்க என்னென்ன பாருங்க! அது மட்டுமா! வைரலாகும் வீடியோ...