அனைத்து பாதிப்புகளுக்கும் நாங்கள்தான் காரணம், தவறை ஒப்புக்கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்ட சாம்சங் நிறுவனம்,.! ஏன் தெரியுமா?

அனைத்து பாதிப்புகளுக்கும் நாங்கள்தான் காரணம், தவறை ஒப்புக்கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்ட சாம்சங் நிறுவனம்,.! ஏன் தெரியுமா?


samsung company ask sorry to labours

தொழிலாளர்களின் உடல்நல குறைவிற்கு நாங்கள்தான் காரணம் என ஏற்றுக்கொண்டு சாம்சங் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனம் சாம்சங். இது உலகில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

சமீபத்தில் இந்நிறுவனத்தின் செமிகண்டக்டர் மற்றும் எல்இடி தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு உடல்ரீதியாகப் பல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.

மேலும் சுமார் 240 தொழிலாளர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,ஒரு சிலர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது பெரும் பரபரப்பை கிளப்பியது.

அதுமட்டுமின்றி அந்த பாதிப்பு அவர்களது குழந்தைகளுக்கும் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.Samsung

இந்நிலையில் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,சாம்சங் நிறுவனம் தங்கள் பக்கம் உள்ளகுறைகளை ஒப்புக்கொண்டு  அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது.

மேலும் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் உடல்நலத்தினை பாதுகாக்கும் பணிக்கு தேவையானவற்றை முறையாகச் செய்யவில்லை. அது மிக பெரிய தவறுதான் ஒப்புக்கொள்கிறோம். இதற்காகத் தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என சாம்சங்கின் துணைத் தலைவர் கிம் கி-நம் கூறியுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 கோடி  இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டு சாம்சங் நிறுவனம் முன்வந்துள்ளது.