உலகம் வீடியோ

கொரோனா அச்சுறுத்தல்! சமூக இடைவெளியுடன் இளம்ஜோடி போட்ட சல்சா நடனம்! இணையத்தை கலக்கும் வீடியோ!

Summary:

Salsa dance with following social distance

சீனாவில் தோன்றிய கொரோனோ வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி கோரதாண்டவமாடி வருகிறது. இத்தகைய கொரோனோ வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகளும் திணறி வருகின்றன. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா தொற்றை குணப்படுத்த மருந்துகளை கண்டுபிடிக்க பல உலக நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கைகளை நன்றாக கழுவ வேண்டும் என தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல பிரபலங்களும் விழிப்புணர்வு வீடியோக்களை  வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பத்திரிகையாளர் பியான்கா பத்ரே ஒகாசியோ என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு ஆண் மற்றும் பெண் இருவரும் கைகளில் கயிறு ஒன்றை வைத்து சமூக இடைவெளியை பின்பற்றி அற்புதமாக சல்சா நடனமாடியுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement