கரப்பான் பூச்சிக்கு சிசேரியன் மூலம் பிரசவம்! மில்லியன் பேரை வியக்க வைத்த அரிய காட்சி!russian-vets-successfully-perform-nano-surgery-for-cock

மருத்துவத்துறையின் வளர்ச்சி நாளுக்கு நாள் புது புது அனுபவங்களையும், அபாரமான வளர்ச்சிகளையும் சந்தித்துவருகிறது. மிக கடினமான வியாதிகளுக்கு கூட சிகிச்சை வழங்கும் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே வருகிறது.

இந்நிலையியில் கால்நடை மருத்துவர் ஒருவர் கரப்பான் பூச்சிக்கு சிசேரியன் மூலம் பிரசவம் பார்த்த சம்பவம் உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது. ரஷ்யாவை சேர்ந்த நபர் ஒருவர் கரப்பான் பூச்சியை தனது செல்ல பிராணியாக வீட்டில் வளர்த்துவந்துள்ளார்.

Mystery

தான் வளர்ந்துவந்த கரப்பான் பூச்சி சில நாட்களாக சிரமப்பட்டு வந்ததை உணர்ந்த அந்த நபர் கரப்பான் பூச்சியை மருத்துவமனைக்கு அழைத்துசென்றுளார். கரப்பான் பூச்சியை சோதித்த மருத்துவர் கரப்பான் பூச்சி கர்ப்பமாக இருப்பதையும், அதற்கு பிரசவ நேரம் நெருங்கியுள்ளதையும் உணர்ந்தார்.

இயற்கையாகப் பிரசவிப்பதில் அந்தக் கரப்பான்பூச்சி சிக்கலைச் சந்தித்துள்ளது. அதன் பின்னர் கரப்பானின் உடலிலிருந்து முட்டை பை ஆப்பரேஷன் மூலம் அகற்றப்பட்டுள்ளது. சிசேரியன் வெற்றியால் இறுதியில் கரப்பான் பூச்சி உயிர் பிழைத்த அதிசயமும் இடம்பெற்றுள்ளது.