முடிவுக்கு வருகிறது கொரோனாவின் கோரத்தாண்டவம்?.. ஆய்வாளர்கள் மகிழ்ச்சி தகவல்.!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தொற்று முடிவுக்கு வருகிறது என ரஷிய மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷியாவின் தொற்றுநோயியல் நிபுணர் விலடிஸ்லாவ் சேம்சுகோவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மனிதர்கள் மீதான கொரோனா வைரஸின் தாக்கம் தனது முடிவை நெருங்கி வருகிறது.
கொரோனா வைரஸ் இயற்கையில் புதிய புகலிடம் தேடி வருவதால், தன்னை கொள்ளாத புதிய விலங்கை கண்டறிந்து, அதன் உடலுக்குள் செல்ல முயன்று வருகிறது. அங்கு புதிய தொற்று இலக்கை கொரோனா எட்டும்.
மனிதர்களில் தடுப்பூசி செலுத்தியவர்கள், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 80 % என்ற நிலையை எட்டும் போது, கொரோனா இயற்கையில் ஏதேனும் விலங்கை புதிய புகலிடமாக பெற்றுக்கொள்ளும். அனைவரும் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.