சிறுமியை கடித்துக்குதறி கொலை செய்ய முயன்ற நாய்கள்: அலட்சியமாக செயல்படும் பெற்றோர்களே உஷார். அதிர்ச்சி வீடியோ வைரல்.!russia-novy-urengoy-minor-girl-bite-by-dogs

குழந்தைகளிடம் வளர்ப்பு பிராணியாக இருந்தாலும், பெற்றோர் இன்றி நெருங்குவது ஆபத்தை வரவழைக்கும் என்பதை உணர்ந்து வரும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள உரங்கோய், நோவி நகரில், சம்பவத்தன்று மூன்றாம் வகுப்பு பயின்று வரும் சிறுமி ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார். 

அங்கு நாய்கள் இருந்த நிலையில், அதனுடன் திரும்பி பழக முற்பட்டதாக தெரியவருகிறது. முதலில் அமைதியாக இருந்த நாய்கள், திடீரென சிறுமியை எதிர்பாராத விதமாக கடித்துகுதறி தாக்குதல் நடத்தியது.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர், படுகாயத்துடன் உயிருக்கு போராடிய சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.