ரஷ்யாவில் வெடித்து சிதறிய கேஸ் ஸ்டேஷன்.. சிதறி ஓடிய மக்கள்.. வைரல் வீடியோ..

ரஷ்யாவில் வெடித்து சிதறிய கேஸ் ஸ்டேஷன்.. சிதறி ஓடிய மக்கள்.. வைரல் வீடியோ..


Russia gas station exploded viral video

ரஷ்யாவில் இயங்கிவரும் கேஸ் ஸ்டேஷன் ஒன்று வெடித்து சிதறும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

ரஷ்யாவின் நொவோசிபிர்ஸ்க் என்ற பகுதியில் இயக்கிவரும் கேஸ் ஸ்டேஷன் ஒன்று இன்று வெடித்து சிதறியது. முறையான பாதுகாப்பு வசதிகள் பின்பற்றப்படாததால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 33 பேர் காயமடைந்ததாகவும், அதில் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் விபத்து குறித்து அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் கேஷ் ஸ்டேஷன் வெடித்து சிதறுவதும், விபத்தில் இருந்து தப்பிக்க அந்த பகுதி மக்கள் தலைதெறிக்க அங்கிருந்து ஓடும் காட்சிகளும் வீடியோவாக வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.