கணவன் இறந்த சோகத்தில் இருந்த மனைவி! 47 ஆண்டுகள் கழித்து வந்த கொரியர்! கதறி அழுத சோக சம்பவம்!

கணவன் இறந்த சோகத்தில் இருந்த மனைவி! 47 ஆண்டுகள் கழித்து வந்த கொரியர்! கதறி அழுத சோக சம்பவம்!


Rink America

கணவன் இறந்த சோகத்தில் இருந்த மனைவிக்கு 47 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் தவற விட்ட கணவனின் மோதிரம் கொரியரில் வந்துள்ளது. அதனை பார்த்ததும் மனைவி கதறி அழுத சோக சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஷான் - டெப்ரா மெக்கென்னா தம்பதியினர். இவர்கள் இருவரும் கல்லூரி படிக்கும் போதிலிருந்தே காதலித்து வந்துள்ளனர். அதன் பிறகு திருமணம் கொண்டு சந்தோஷமாக தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர்.

America

தற்போது 47 ஆண்டுகள் ஆகிய நிலையில் திடீரென ஷான் உயிரிழந்துள்ளார். இதனால் சோகத்தில் இருந்த மனைவி டெப்ரா மெக்கென்னாவுக்கு கொரியர் வந்துள்ளது. அதனை பிரித்து பார்த்ததும் கண்கலங்கி கதறி அழுதுள்ளார்.

அதற்கு காரணம் 47 ஆண்டுகளுக்கு முன்பு தனது காதலரும், கணவருமான ஷான் கொடுத்த மோதிரம் காணமல் போன நிலையில் தற்போது அது மீண்டும் கிடைத்துள்ளது. இந்நிகழ்வு டெப்ரா மெக்கென்னா அவருக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஃபின்லாந்தில் உள்ள காரினா பூங்காவில், ஊழியர் ஒருவர் பூங்காவை சுத்தம் செய்யும் போது, அந்த மோதிரம் அவருக்கு கிடைத்துள்ளது. மெக்கென்னா மற்றும் ஷான் படித்த பள்ளியின் பெயர் அந்த மோதிரத்தில் பொறிக்கப்பட்டிருந்ததால், பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, அதன் மூலம் மோதிரத்தை மெக்கென்னாவுக்கு கொரியர் அனுப்பியுள்ளனர்.