புதிய வரலாறு படைக்கும் சவுதி அரேபிய பெண்மணி

புதிய வரலாறு படைக்கும் சவுதி அரேபிய பெண்மணி


puthia varalaru padaikkum sowthipen

எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா நாடுகளில் ஒன்று சவுதி அரேபியா. இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் தீவிர இஸ்லாம் கொள்கையை உடையவர்கள்.  இதனால் இஸ்லாமிய நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது இதனால் அங்கு வாழும் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சம உரிமைகள் மறுக்கப்பட்ட அவலநிலை தொன்றுதொட்டு இருந்துவந்தது.

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை சவுதி அரேபிய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு தொடர்ச்சியாக விஷன் 2030 என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக இருந்து வந்த பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் மாதத்தில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு இருந்த தடையை சவுதி அரேபியா அரசு நீக்கி  உத்தரவிட்டு இருந்தது.  மேலும்,  ரியாத்தை சேர்ந்த பிளைனாஸ் என்ற விமான நிறுவனம் பெண்களை உதவி பைலட்டாகவும் ,  பணிப்பெண்ணாகவும்  நியமித்தது  குறிப்பிடத்தக்கது.



 

இதற்கு முன்பு சமையல்,  வானிலை தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே பெண்கள் பங்கு பெற்று வந்த நிலையில் தற்போது புர்கா அணிந்த வியம் அல் தகீல் என்ற பெண், உமர் அல் நஷ்வான் என்ற ஆண் செய்தி வாசிப்பாளருடன் இணைந்து,அந்நாட்டு அரசு தொலைக்காட்சியான சவுதி சேனல் 1ல் மாலை நேர செய்தி வாசித்து புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்.