இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்; மகிழ்ச்சியில் சிறைக்கைதிகள்..!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்; மகிழ்ச்சியில் சிறைக்கைதிகள்..!!



prisoners escaped from Indonesia jail

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 1200க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். அதே சமயத்தில் அங்கு உள்ள மூன்று சிறைகளில் இருந்து 1200 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்தோனேஷியாவின் சுலேவேசியா தீவில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுலேவேசியாவின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 7.5ஆக இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. 

indonesia

இதைத்தொடர்ந்து நில அதிர்வுகளும் ஏற்பட்டன.கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வெள்ளிக்கிழமை மாலை சுனாமி பேரலைகள் தாக்கின. இந்தோனேஷியாவின் பல பகுதிகளை சுனாமி தாக்கியது.

இந்த நில நடுக்கம், சுனாமிக்கு 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை இடிபாடுகளில் இருந்து 744 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இறந்தவர்களின் உடல்கள் பல்வேறு இடங்களில் ஒட்டுமொத்தமாக அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

 

நிலநடுக்கம் ஏற்பட்ட பலு மற்றும் தாங்கலா நகரத்தில் உள்ள சிறைச்சாலைகளின் உள்சுவர்கள் இடிந்து விழுந்தன. சுனாமி தாக்கிய பலு நகரில் நில நடுக்கத்தின்போது அங்குள்ள 2 பெரிய சிறைகளின் சுற்றுப் புறச் சுவர்கள் இடிந்து விழுந்தன. 

நில நடுக்கத்தில் சிறையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததுமே 581 கைதிகள் தப்பியோடி விட்டனர். ஏராளமானோர் முக்கிய நுழைவு வாயில்களை திறந்து கொண்டும் ஓடினர். இவர்களை பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த சிறைக் காவலர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

indonesia

இதே நகரில் உள்ள மற்றொரு சிறையில் இருந்து 276 கைதிகள் தப்பிச் சென்று விட்டனர். 

நில நடுக்கம் ஏற்பட்ட டோங்கலா நகர சிறைக்கு தீ வைத்துவிட்டு, அங்கிருந்த 343 கைதிகள் தப்பிவிட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் லஞ்சம், போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் என்பதும் நில நடுக்கம், சுனாமி தாக்குவதற்கு முதல் நாள் பலு நகர சிறையில் இருந்து பயங்கரவாத குற்றங்கள் தொடர்புடைய கொடிய குற்றவாளிகள் 5 பேர் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

டோங்கலா நகர சிறைக்கு கைதிகள் தீ வைத்த விஷயத்தை பொறுத்தவரை தங்களுடைய உறவினர்களை பார்க்க அனுமதிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் கைதிகள் இந்த வன்செயலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.