அய்யோ... ஆபத்து! ஒத்த இறைச்சி துண்டை வைத்து மொத்தமாக மீன்களை அள்ளிய மீனவர்! அதிர்ச்சியாக்கும் மீன்பிடி வீடிய!!!



piranha-fish-catching-video-goes-viral

சமூக வலைதளங்களில் அவ்வப்போது வியப்பூட்டும் மற்றும் ஆபத்தான சம்பவங்களை காட்டும் வீடியோக்கள் வைரலாகி பேசுபொருளாக மாறுகின்றன. தற்போது தென் அமெரிக்காவில் மிகவும் ஆபத்தானதாக கருதப்படும் பிரானா மீன் வேட்டையாடும் விதத்தை காட்டும் ஒரு வீடியோ இணையத்தில் பரவி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வித்தியாசமான முறையில் மீன் பிடித்த மீனவர்

அமேசான் காடுகள் மற்றும் தென் அமெரிக்காவின் சில நதிப் பகுதிகளில் காணப்படும் பிரானா மீன்கள் மிகவும் கொடூரமானவை என கருதப்படுகின்றன. பொதுவாக மீனவர்கள் வலை அல்லது தூண்டில் பயன்படுத்தி மீன் பிடிப்பது வழக்கம். ஆனால் இந்த வைரல் வீடியோவில் ஒரு மீனவர் மிகவும் வித்தியாசமான முறையை பயன்படுத்துகிறார்.

இறைச்சித் துண்டால் ஈர்க்கப்பட்ட மீன்கள்

எக்ஸ் தளத்தில் @TansuYegen என்ற பயனர் பகிர்ந்துள்ள சுமார் 40 வினாடிகள் கொண்ட வீடியோவில், மீனவர் ஒரு பெரிய மாமிசத் துண்டை நீருக்குள் காட்டுகிறார். உடனே நீரில் இருந்த நூற்றுக்கணக்கான பசி கொண்ட பிரானா மீன்கள் அந்த இறைச்சியை கடிக்க வேகமாக திரண்டு வருகின்றன. மீன்கள் இறைச்சியை கவ்வும் அந்த தருணத்தில் அவற்றை லாவகமாக ஒரு கூடையில் அள்ளி விடும் காட்சி காணப்படுகிறது.

இதையும் படிங்க: நீயா நாணான்னு பாப்போம்....திரும்ப திரும்ப கரண்ட் ஷாக் அடித்தாலும் சுருண்டு சுருண்டு வாயை பிளந்து ஏறும் பாம்பு! வைரல் வீடியோ!!!

இணையத்தில் வைரலான காட்சி

இந்த வீடியோ இதுவரை 1.25 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப் பார்த்த பல நெட்டிசன்கள் வியப்பும் அச்சமும் கலந்த கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். "தவறுதலாக யாராவது அந்த நீரில் விழுந்தால் என்ன ஆகும்?" என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொருவர் "வெறும் இறைச்சியை வைத்து இவ்வளவு மீன்களை பிடிப்பது ஆச்சரியமாக இருக்கிறது" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்கள் தங்களது உணவுத் தேவைக்காக இவ்வாறான முறையிலேயே வைரல் வீடியோவில் காணப்படும் போல பிரானா மீன்களை பிடிப்பது வழக்கமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதையும் படிங்க: அடி ஆத்தீ....இது தான் நிஜமான பரமபத விளையாட்டு... பாம்புகளே காய்களாக, பெண்ணே பகடையாக... கொத்த வரும் நிஜ பாம்பு! திக் திக் திகில் வீடியோ..!!!