தொடர் வருமானம் இழப்பு, நிதிச்சுமை பிரச்சனையால் முடிவு; பிலிப்பைன்ஸில் சிஎன்என் செய்தி நிறுவனம் மூடல்.! 



Philippines CNN Office Closed 


தெற்காசிய அளவில் புகழ்பெற்ற செய்தி நிறுவனமாக இருப்பது சிஎன்என். இந்நிறுவனம் சர்வதேச அளவில் தனது கிளைகளை பல நாடுகளில் வைத்து, முன்னணி செய்தி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. 

இந்நிறுவனத்திற்கு பிலிப்பைன்ஸில் உள்ள அலுவலகத்தில் 300 க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சிஎன்என் நிறுவனம் பிலிப்பைன்ஸில் தனது அலுவலகத்தை மூடுவதாக அறிவித்துள்ளது. 

கடந்த 2021ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஏற்பட்டு வந்த நிதிச்சுமை மற்றும் வருமானமின்மை காரணமாக தனது பிலிப்பைன்ஸ் அலுவலகத்தை மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 300 ஊழியர்கள் வேலையிழப்பை எதிர்கொண்டுள்ளனர். 

அவர்களின் பணியை நியாயப்படுத்தும்பொருட்டு, அரசு விதிமுறைப்படி வேலை நிறுத்தம் செய்யப்படும் எனவும் பிலிப்பைன்ஸ் சிஎன்என் தெரிவித்துள்ளது.