உலகம்

மறைந்திருந்து தாக்குவதற்கு புதிய தொழில் நுட்பத்தை ஜெர்மனியிடம் கேட்ட பாக்கிஸ்தான்.! மூக்குடைபட்ட இம்ரான்கான்!

Summary:

Pakistan seeks help from Germany. they won’t help

பாகிஸ்தான் நாடு தனது நீர்மூழ்கிக்கப்பல்களை மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மூலம் அதன் தரத்தை உயர்த்தி வருகிறது. எப்போதுமே நீர்மூழ்கிக்கப்பல்கள் நீர்மட்டத்தில் தெரியாதபடி தண்ணீருக்குள் இருந்தாலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது கடல் பரப்புக்கு வெளியே வந்துதான் ஆகவேண்டுமாம். ஆனால்,  நீர்மூழ்கிக்கப்பல்கள் நீர்மட்டத்தில் தெரியாதபடி தண்ணீருக்குள்ளே இருப்பதற்கு ஒரு தொழில் நுட்பம் உள்ளதாம்.

 அதன்பெயர் அதன்பெயர் Air Independent Propulsion (AIP) இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தும்போது வாரக்கணக்கில் நீர்மூழ்கிகள் தண்ணீர் பரப்புக்கு வராமலே சமாளிக்க முடியும் என கூறப்படுகிறது. இதனால் பல வாரங்கள் தண்ணீருக்குள் மறைந்திருந்து தாக்க இந்த நீர்மூழ்கிக்கப்பல்களால் முடியும், தாக்கிவிட்டு தப்பிவிடவும் முடியும் என்பதால் ஜேர்மனியிடம் அந்த தொழில் நுட்பத்தை கேட்டுள்ளது பாகிஸ்தான்.

ஆனால், ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான பாதுகாப்புக்குழு, அந்த அமைப்பை பாகிஸ்தானுக்கு கொடுக்க மறுத்துவிட்டது.  ஜேர்மனி மறுப்பதற்கு முக்கிய காரணம் கடந்த 2017ஆம் ஆண்டு, காபூலில் உள்ள ஜேர்மன் தூதரகத்தில் குண்டு வைத்தவர்களை தண்டிக்க பாகிஸ்தான் தவறிவிட்டது.

அந்த வெடிகுண்டு சம்பவத்தில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டார்கள். அந்த சம்பவத்தின் பிண்ணனியிலிருந்தவர்களுக்கு பாகிஸ்தானின் ஆதரவு உள்ளது. இதனால், தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தானால் முடியாததால் அதன் கோரிக்கையை ஜேர்மனி மறுத்துள்ளது.


Advertisement