உலகம்

தந்தை இறந்தது கூட தெரியாத வயது! சவப்பெட்டி அருகே நின்று தந்தையின் தொப்பியுடன் விளையாடும் குழந்தை!

Summary:

One year old child playing at father funeral

ஆஸ்திரேலியா நாட்டில் ஏற்பட்ட காட்டு தீயில் கருகி மனிதர்கள் உட்பட இதுவரை பலகோடி விலங்குகள் தீக்கு இறையாகியுள்ள சம்பவம் உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதன் இன்னொரு பகுதியாக காட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட தான்னார்வலர் ஒருவர் மரணமடைந்த நிலையில் அவரது ஒரு வயது குழந்தை தந்தையின் சவப்பெட்டி அருகே விளையாடிக்கொண்டிருந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள மேற்கு சிட்னி பகுர்தியை சேர்ந்தவர் ஆண்ட்ரு, இவர் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து காட்டு தீயையை அணைக்க உதவி வந்துள்ளார். இந்நிலையில் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து தீயை அணைக்க வாகனத்தில் சென்றபோது வாகனத்தின் மீது மரம் விழுந்ததில் ஆண்ட்ரு உயிர் இழந்துள்ளார்.

இதனை அடுத்து ஆண்ட்ருவின் இறுதி சடங்கில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அவரது மனைவி ஜெனி ஆகியோர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து அரசு மரியாதையுடன் ஆண்ட்ருவின் தொப்பி அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த தொப்பியை எடுத்து தனது தலையில் மாட்டிக்கொண்டு ஆண்ட்ருவின் ஒரு வயது மகள் தந்தையின் சவப்பெட்டி அருகே விளையாடிக்கொண்டிருந்த சம்பவம் பார்ப்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement