ஆத்தாடி.. வளைஞ்சு நெளிஞ்ச இந்த ஸ்பூனோட விலை இத்தனை லட்சமா! வாங்குவதற்கு கடும்போட்டி! அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா??

ஆத்தாடி.. வளைஞ்சு நெளிஞ்ச இந்த ஸ்பூனோட விலை இத்தனை லட்சமா! வாங்குவதற்கு கடும்போட்டி! அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா??


old-spoon-sales-for-2-lakhs-rupees

லண்டனை சேர்ந்த நபர் ஒருவர் தன் காரில் பழைய மிகவும் வளைந்து, நெளிந்து காணப்பட்ட  ஸ்பூன் ஒன்றை கண்டறிந்துள்ளார். இந்நிலையில் அதனை மிகவும் வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்த அவர் அது மிகவும் அரிய வகை, பழங்கால ஸ்பூனாக இருக்கலாம் என கருதி அதை ஏலம் விட லாரன்சஸஸ் ஏல மையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

அதனை ஏல மையத்தில் ஆய்வு செய்தபோது, அந்த ஸ்பூன் வெள்ளியால் செய்யப்பட்ட 5 இன்ச் நீளம் கொண்ட ஸ்பூன் எனவும், மேலும் 13ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட ஸ்பூனாக இருக்கலாம் எனவும் கண்டுபிடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த ஸ்பூன் ரூ51,712 க்கு பட்டியலிடப்பட்டு ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்த ஸ்பூனை வாங்குவதற்கு அனைவர் மத்தியிலும் கடுமையான போட்டி நிலவிய நிலையில், இறுதியாக அந்த ஸ்பூன் ரூ2 லட்சத்திற்கு ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி அனைவர் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.