கடலுக்கு அடியில் சுனாமியை ஏற்படுத்தும் அணு ஆயுதத்தை சோதித்த வடகொரியா; அதிர்ச்சியை தந்த தகவல்.!

கடலுக்கு அடியில் சுனாமியை ஏற்படுத்தும் அணு ஆயுதத்தை சோதித்த வடகொரியா; அதிர்ச்சியை தந்த தகவல்.!



North Korea Missile Testing Tsunami Wave

கடலுக்கடியில் சுனாமியை உருவாகும் அணுஆயுதம் சோதனை செய்யப்பட்டது.

உலக அளவில் எந்த ஒரு நாட்டோடும் தொடர்பு இல்லாமல் தன்னை தனி நாடாக வைத்து நாட்டு மக்களை சர்வாதிகார ஆட்சியாளர் மிரட்டி வரும் வடகொரியாவில் அதிபர் கிங் ஜாங் முன் ஆட்சி நடத்தி வருகிறார். 

அந்நாட்டு அரசு தொடர்ந்து அணு ஆயுத தயாரிப்பில் முனைப்பு காண்பித்து வருகிறார். அணு ஆயுத சோதனைகளை கட்டுப்படுத்த அமெரிக்கா பல முயற்சிகள் எடுத்தும் அது தோல்வியை தழுவியது. 

North Korea

இதனால் அமெரிக்கா வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்பட்டது. அதனால் அந்நாட்டின் நிதி நிலைமை மோசமாக இருந்தாலும், அரசு தொடர்ந்து அணு ஆயுதத்தை ஊக்குவித்து வருகிறது. 

இந்த நிலையில், வடகொரியா கடந்த சில நாட்களுக்கு முன்னதாக செயற்கை ரேடியோ ஆக்டிவ் அணு ஆயுதங்களை சோதித்ததாக கூறப்படுகிறது. இது கடலுக்கு அடியில் சுனாமியை ஏற்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.