உலகம்

தூங்கும் போது காதில் நுழைந்த கரப்பான் பூச்சியால் கதறிய இளைஞர்.!!

Summary:

தூங்கும் போது காதில் நுழைந்த கரப்பான் பூச்சியால் கதறிய இளைஞர்.!!

ஆணின் காதில் நுழைந்த கரப்பான் பூச்சி 3 நாட்களுக்கு பின்னர் மருத்துவர்களால் அகற்றப்பட்டது.

நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்து நகரை சேர்ந்த ஜேன் வெட்டிங் என்பவர், தனது காதுகளில் தண்ணீர் இருப்பது போன்ற உணர்வை அனுபவித்துள்ளார். காதுகளில் தண்ணீர் இருக்கலாம் என்று தவறாக அவர் புரிந்துகொண்ட நிலையில், மறுநாள் சோபாவில் தூங்கும் சமயத்தில் காதுக்குள் எதோ நெளிவது போன்று உணர்ந்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்து எழுந்த ஜேன், மறுநாள் மருத்துவமனைக்கு சென்று விஷயத்தை கூறியுள்ளார். மருத்துவர் காது மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற அறிவுறுத்திய நிலையில், காது மருத்துவர் ஜேனை சோதனை செய்துவிட்டு காதில் பூச்சி இருப்பதை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மருத்துவர்கள் பூச்சியை அகற்ற நடவடிக்கை எடுத்து, உறிஞ்சும் சாதனத்தின் உதவியுடன் அதனை வெளியே எடுத்தனர்.


Advertisement