சிறுநீரை மறுசுழற்சியில் குடிநீராக்கும் சோதனை வெற்றி; நாசா அறிவிப்பு.!

சிறுநீரை மறுசுழற்சியில் குடிநீராக்கும் சோதனை வெற்றி; நாசா அறிவிப்பு.!



  Nasa Announce Urine Recycling 

 

விண்வெளி பயணத்தின்போது, நீரை விண்வெளிக்கு கொண்டு செல்வதோ அல்லது குடிப்பதோ சாத்தியம் இல்லாத விஷயமாகும். அதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

இதனால் விண்வெளி வீரர்கள் சிறுநீர் மற்றும் வியர்வையை மறுசுழற்சி செய்து தங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். 

இறுதிக்கட்ட சோதனையின்படி 98% திரவங்களை மறுசுழற்சி செய்து குடிநீரை உற்பத்தி செய்யும் விஷயத்தில் நாசா வெற்றி அடைந்துள்ளது. 

தற்போது நாசா விண்வெளி வீரர்களின் சுவாசத்தை மறுசுழற்சி செய்யும் சோதனையை செய்து வருகிறது. விரைவில் அதிலும் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.