மதமாற்ற கும்பலால் என் மனைவி என்னஎன்னமோ பண்ற.... மகளையும் கூட அவ விடல! வங்கியில் நடக்கும் கொடூரம்.... மும்பையில் மீண்டும் ஒரு சம்பவமா..? பகீர் புகார்..!!!
மும்பை நரிமன் பாயிண்டில் செயல்படும் முன்னணி வங்கியின் கிளையில் பணிபுரியும் பெண் அதிகாரியை திட்டமிட்டு மதமாற்றம் செய்ய முயன்றதாக அவரது கணவர் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கி நிர்வாகத்திற்கும் போலீசாருக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பாக உதய்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சக ஊழியர் மீது கணவர் குற்றச்சாட்டு
தகவலின்படி, மும்பை நரிமன் பாயிண்ட் கிளையில் வர்த்தக வாடிக்கையாளர் குழுவின் ஐபி பிரிவில் பணிபுரியும் தனது மனைவி, கடந்த சில மாதங்களாக திடீரென வாழ்க்கை முறையில் மாற்றம் காட்டியதாக கணவர் தெரிவித்துள்ளார். புர்கா அணிவது, இஸ்லாமிய மத நூல்கள் படிப்பது, நோன்பு நோற்பது போன்றவற்றில் அவர் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அதே கிளையில் பணிபுரியும் சாஃபின் கோதல் என்ற ஊழியரின் தூண்டுதலால், தானும் தங்களது 8 வயது மகளும் இஸ்லாம் மதம் மாற விரும்புவதாக மனைவி கூறியதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 16 வயதில் திருமணமான இளம்பெண்! கணவர் வீட்டில் நாளுக்கு நாள் நரக வேதனை.... வாந்தி எடுத்த மறுநாளே மரணம்! திருமணமான 2 வருஷத்தில் நேர்ந்த கொடூரம்!!!
உதய்பூருக்கு அழைத்துச் சென்ற கணவர்
இதையடுத்து, தனது மனைவியை அந்தச் சூழலில் இருந்து விலக்குவதற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றதாக கணவர் தெரிவித்துள்ளார். அதன்பின், வங்கி நிர்வாகத்திடம் பணி மாறுதல் கோரியும் விண்ணப்பித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி அதிகாலையில் மும்பையில் இருந்து உதய்பூர் வந்த சாஃபின், தனது மனைவியையும் மகளையும் அழைத்துச் சென்றுவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த தகவல் வெளியாகியதையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
2020-22 காலகட்டம் குறித்தும் புகார்
மேலும், 2020 முதல் 2022 வரை மாலாடு கிளையில் பணியாற்றிய காலத்திலும் தனது மனைவி சிக்கலில் இருந்ததாக கணவர் தெரிவித்துள்ளார். அப்போது ஆதிலா என்ற ஒப்பந்த ஊழியர் மூலம் பாலியல் மற்றும் பொருளாதார ரீதியாக சுரண்டப்பட்டதாகவும், இது திட்டமிட்ட மதமாற்றக் கும்பல் செயலாக இருக்கலாம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் உதய்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.