50 நாட்கள் லாக்டவுனிற்கு பிறகு கடையை திறந்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

50 நாட்கள் லாக்டவுனிற்கு பிறகு கடையை திறந்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!



Moylds form at leather items ahead of lockdown

மலேசியாவில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் கடந்த 50 நாட்களாக லாக்டவுனில் இருந்த மலேசியாவில் தற்போது பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் லாக்டவுன் நீக்கப்பட்டதையடுத்து அங்குள்ள பிரபல மால்களில் ஒன்றான பெனாங்க்ஸ் பால் டைகஸ் என்ற மால் திறக்கப்பட்டது. அந்த மாலில் பிரபல தோல்பொருட்கள் விற்பனையகமான மெட்ரோ ஷோ ரூம் ஒன்று உள்ளது.

lockdown

லாக்டவுனால் 50 நாட்களாக திறக்கப்படாமல் இருந்த அந்த ஷோ ரூமில் இருந்த அனைத்து பொருட்களும் பூஞ்சை பிடித்து பழைய பொருட்கள் போல் ஆகிவிட்டன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த கடை உரிமையாளர், "இந்த பொருட்கள் எப்போதும் ஒரே சீரான தட்பவெப்பநிலையில் இருக்க வேண்டியவை.

எனவே தான் ஷோ ரூமில் ஏசி எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் லாக்டவுன் காரணமாக ஏசி எதுவும் ஓடாததால் தட்பவெப்பநிலை மாற்றத்தால் பொருட்கள் இப்படி வீணாகிவிட்டன" என கூறியுள்ளார். மேலும் அந்த பொருட்களை சுத்தம் செய்து மீண்டும் விற்பனைக்கு வைத்துள்ளனராம்.